சூடானில் காலரா நோய் பாதிப்பு

214 0

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஏற்பட்டுள்ள காலரா நோய் பாதிப்பால் 7 பேர் பலியாகினர். பலர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சூடான் சுகாதாரத் துறை அமைச்சர் அக்ரம் கூறும்போது, “சூடானில் தெற்கு மாகாணத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு அதிகமாக காலாரா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நில் மாகாணத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாகாணங்களில் இந்த அளவு பாதிப்பில்லை. காலாரா நோய் காரணமாக 7 பேர் பலியாகி உள்ளனர். பலர் இந்த நோய் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்” எனு தெரிவித்துள்ளார்.

காலாரா நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர் அக்ரம் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக நடந்து வருவதாக சூடான் அரசு தெரிவித்துள்ளது.

 

மேலும் சூடானில் பல இடங்களில் மலேரியா தாக்கமும் இருப்பதாக உலக சுகாதாரத் துறை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டிலும் சூடானில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம், கனமழை காரணமாக அந்நாட்டில் கடுமையான நோய் பாதிப்புகள் ஏற்பட்டன.