காணாமல் போனவர்களுக்களுக்கான நினைவு கூரல்

310 0

sequence-02-still042காணமல் போனவர்களை நினைவு கூரும் வருடாந்த நிகழ்வு நாளை நீர்கொழும்பு சீதுவ–ரத்தொளுகம சந்தியில் உள்ள நினைவு தூபியின் அருகில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இலங்கையில் காணாமல் போனோருக்கு நீதி கிடைக்கவும் மீண்டும் காணமல் போதல் இடம்பெறாதிருக்கவும் , 1991 ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படும் காணாமல் போனோரை நினைவு கூறும் நிகழ்வு இம்முறை நாளை காலை 09.30 மணி முதல் நண்பகல் 12. 30 மணி வரை சீதுவ – ரத்தொளுகம சந்தியில் அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர்களுக்கான நினைவு தூபியில், காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

காணாமல் போனோருக்காக நினைவு கூரும் இந்நிகழ்வில் காணமல் போன குடும்ப அங்கத்தவர்களின் அனுபவ பகிர்வுகள், ஒத்துழைப்பிற்கான தகவல்களை முன்வைத்தல், கலைஞர் ஜயதிலக்க பண்டாரவின் நினைவு நிகழ்வும் நடைபெறவுள்ளதுடன், இந்நிகழ்வில் 11 ஆசிய நாடுகளில் 14 அமைப்புக்களை பிரதிநிதித்துவ படுத்தும் காணமல்போகச் செய்வதற்கு எதிரான ஆசிய பெடரேஷன், தென்கொரிய க்வான்ஜி மே 18 நினைவு மன்றம், மே 18 பாதிக்கப்பட்டோரின் மன்றம் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் போனோர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் அரசியல், சிவில், சமூக அமைப்புக்கள், மதத்தலைவர்கள், சமய பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவன அமைப்புக்களின் பிரதிநிதிகள் என காணாமல் போனவர்களுக்காக செயல்படும் அனைத்து தரப்பினர்களும்; இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளனர