யாழில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

401 0

sequence-02-still041கல் உடைப்பதற்கு குறைந்த செலவில் விரைவாக அனுமதி வழங்குமாறு கோரி கல் உடைக்கும் தொழிலாளர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியுள்ளனர்.

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புத்தூர், சிறுப்பிட்டி, வேவிபுரம் நீர்வேலி, அச்சுவேலி, நவக்கிரி, வழலாய், தம்பாலை மற்றும் பத்தமேனி போன்ற இடங்களைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினரே இன்று யாழ்ப்பாணப் பிராந்திய புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தனை முன்னெடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் யாழ் மாவட்டச்செயலகம், கோப்பாய் பிரதேச செயலகம், மற்றும் புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அதிகாரி பணிமனை ஆகியவற்றுக்கு முன்பே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து யாழ் மாவட்ட அரச அதிபர், கோப்பாய் பிரதேச செயலர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அதிகாரி அகியோரிடம் குறித்த விடயம் தொடர்பான மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.

நீண்டகால அனுமதி என்ற அறிவித்தல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டு வந்த கல் உடைக்கும் தொழிலை தொடர்ந்து மேற்கொள்வதற்கு பொலிஸார் தடையாக உள்ளதாகவும் ஒருபக்க சார்பாக அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு பொலிஸார் அனுமதி அளித்து துணைபோகின்றார்கள் என்றும், கைகளால் கல் உடைப்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வலி கிழக்கு பிரதேசத்தில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் அன்றாட வாழக்கைச் செலவுகள் மற்றும் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பாகவும், கல் உடைப்பதற்கு உடனடியாக குறைந்த செலவிலான அனுமதியை பெற்றுத்தருமாறும் கோரி அதிகாரிகளிடத்தில் மகஜரினை கையளித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட கல் உடைக்கும் தொழிலாளிகள் குறிப்பிட்டுள்ளனர்.