பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து அரச நிர்­வாகம் மற்றும் முகா­மைத்­துவ அதி­கா­ரிகள் நேற்­றைய தினமும் இரண்டா­வது நாளாக வேலை நிறுத்த போராட்­டத்தில் ஈடு­பட்­ட­தனால். மக்கள் பெரும் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகங்கொடுத்­தி­ருந்­தனர்.

இந்த வேலை நிறுத்த போராட்­டத்­தினால் குடி­வ­ரவு – குடி­ய­கல்வு திணைக்­களம், ஆட்­ப­திவு திணைக்­களம், ஓய்­வூ­திய திணைக்­களம், மோட்டார் வாகன திணைக்­களம் மற்றும் பிர­தேச செய­ல­கங்­களின் செயற்­பா­டுகள் முடங்­கி­யி­ருந்­தன.

சம்­பளப் பிரச்­சினை உள்­ளிட்ட சில கோரிக்­கை­களை முன்­வைத்து நேற்று முன்­தினம் செவ்­வாய்­கி­ழமை இந்த வேலை நிறுத்த போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. எனினும் தம்மால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் இது வரையில் செவி சாய்க்­க­வில்லை என்றும், தீர்­வினை வழங்­கு­வ­தற்கு அர­சாங்­கத்­தினால் இய­லா­ம­லுள்­ள­தாக வேலை நிறுத்­தத்தில் ஈடு­பட்­டுள்ள அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

எவ்­வா­றி­ருப்­பினும் வேலை நிறுத்­தத்­தினால் மேற்­கு­றித்த திணைக்­க­ளங்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு பாதிப்பு ஏற்­பட்­ட­தாக இது­வரை முறைப்­பா­டுகள் ஏதுவும் கிடைக்­க­வில்லை என்று பொது நிர்­வாக அமைச்சு தெரி­வித்­துள்ள அதே வேளை, சம்­பளப் பிரச்­சினை தொடர்­பி­லான தொழிற்­சங்­கத்தின் யோச­னையை, அமைச்­ச­ரவை உப­கு­ழு­விடம் சமர்ப்­பிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது.

அமைச்­சினால் இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்ள போதிலும் தொடர்ச்­சி­யாக இரு தினங்­க­ளாக இவ்­வாறு வேலை நிறுத்தம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதால் தமக்கு தேவை­யான சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாமலுள்ளது என்றும், உடனடியாக பெற வேண்டிய சேவையைக் கூட அடுத்த வாரம் பெற்றுக் கொள்ளுமாறு தாம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.