விவசாய அமைச்சுக்கு கட்டடமொன்று பெற்றுக்கொள்ளப்பட்டமை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்ய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளில் கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையிலேயே பிரதமரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் விவசாயத்துறை அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவிடம் முன்னதாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
மேலும் எதிர்வரும் 10ஆம் திகதியும் வாக்கமூலமொன்றினை பதிவு செய்வதற்காக ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே பிரதமரிடம் வாக்குமூலமொன்றினை பெறுவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

