நான், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப்போவதாக அறிவிக்கவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தின்போது, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக, ரணில் கூறியதாக பெரும்பாலான ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன.
இந்நிலையில் குறித்த தகவல் பொய்யானதென கூறி ரணில் இன்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில், கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, அதன் பின்னரே அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

