ஐக்கிய தேசிய கட்சி எந்தவொரு வேட்பாளரை நிறுத்தினாலும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என்பதில் மாற்றமில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தலுக்கு, நாம் தயாராகவே இருக்கின்றோமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்குள் வேட்பாளர் விடயத்தில், தொடர்ந்தும் சிக்கல் நிலவுகின்றதெனவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ரணிலை, கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, வேட்பாளராவதற்கு சிலர் முயற்சிகள் மேற்கொள்வதனை அவதானிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

