பெக்கோ இயந்திரத்தில் சிக்குண்டு நபர் ஒருவர் பலி

295 0

நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி, கிரிமிட்டிகம, திஸ்பனகந்த பகுதியில் பெக்கோ இயந்திரத்தில் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (05) காலை 10 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கட்டிருந்த பெக்கோ இயந்திரத்தினை திருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பெக்கோ இயந்திரத்தின் ஒரு பகுதி திடீர் என விழுந்ததில் குறித்த நபர் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.