பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்-சாந்த கோட்டே

360 0

பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டுமென்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக தனித்தனியாக போராடுவதை விட ஒன்றிணைந்து மூலோபாயத்தை பின்பற்றுவதன் மூலம் வினைத்திறனான பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.