ரணில் விக்ரமசிங்க பாரிய பொருளாதா புரட்சியை நிகழ்த்தியுள்ளார்-அஜித் நிவாட்

352 0

கடந்த நான்கு வருடங்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையாமல் இருந்திருந்தால் ஹம்பாந்தோட்ட துறைமுகம் போன்ற மூன்று துறைமுகங்களை உருவாக்கியிருக்கலாம் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ´நாட்டின் கடன் சுமை 70 வீதம் முதல் 90 வீதம் வரை உயர்த்த முடிந்துள்ளது. இதுவே ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார அணுகு முறை. கடந்த 2014 ஆம் ஆண்டில் வட்டி விகிதம் 436. பில்லியனாக ரூபாவாக ஆனால் 2018 க்குள் வட்டி வீதம் 852 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

நாட்டின் கடன் சுமையை குறைப்பதாக கூறியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அவ்வாறு குறைத்திருந்தால் வட்டி வீதம் எப்படி அதிகரிக்கும்.

ரூபாவின் பெறுமதி குறைந்தவுடன் நாட்டின் கடன் சுமை பெருமளவில் அதிகரித்துள்ளது.

நாம் ஒரு டொலருக்கு மாத்திரம் கடன் வாங்கியிருந்தால், அந்த டொலரின் பெறுமதி 2014 ஆம் ஆண்டில் 136 ஆக இருந்திருக்கும். ஆனால் தற்போது டொலரின் பெறுமதி 181 ஆக உயர்ந்துள்ளது.

இதன் விளைவாக நாட்டின் கடன் சுமையாக குறிப்பிடதக்களவில் அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில், ரூபாவின் பெறுமதி கூடியதால் 19 பில்லியன் ரூபாவாக கடன்சுமை குறைக்கப்பட்டது. அதேபோல் கடந்த 2014 ல் ரூபாவின் பெறுமதி கூடியது. 2015 இல் 285 பில்லியன் ரூபாவாகவும் 2016 இல் 187 பில்லியன் ரூபாவாகவும் அதிகரித்தது.

2017 இல் 225 பில்லியனாகவும் 2018 க்குள் அது 1063 பில்லியனாக ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த குறிக்காட்டி எண்கள் ஒவ்வொன்றும் மத்திய வங்கியின் பதிவுகளில் உள்ளன.

மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் நாட்டின் கடன் சுமை 1760 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இவை மில்லியன் ரூபாய்களால் அல்ல பில்லியன்களாக அதிகரித்துள்ளது. இந்த பணத்தின் மூலம், ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை போன்று மூன்றை அமைக்கலாம்.

மறுபுறம் எந்தவொரு சொத்தும் நாட்டுக்காக உருவாக்கப்படவில்லை. முன்பு கடன் பெறும் போது அதனால் நாட்டுக்கான சொத்துகளை சேர்த்தோம்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் மற்றும் அதிவேக வீதிகளை அதற்கு உதாரணமாக சொல்லலாம். இதன்மூலம் ரணில் விக்ரமசிங்க பாரிய பொருளாதா புரட்சியை நிகழ்த்தியுள்ளார்.