48 நாடுகளுக்கு விசாக் கட்டண நீக்க முறையானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஒஸ்ட்ரியா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, கம்போடியா, சீனா, குரோசியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, இந்தியா, இந்தோனேஷியா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லத்வியா, லிதுவேனியா, லக்சம்பேர்க், மலேஷியா, மோல்டா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, பிலிப்பைன்ஸ், போலந்து, போர்த்துக்கல், ரொமேனியா, ரஷ்யா, சிங்கப்பூர், தென் கொரியா, ஸ்லோவாகியா குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, உக்ரைன் மற்றும் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கே இவ்வாறு விசாக் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக இலங்கைக்கு வீசா பெறும்போது அறவிடப்படும் கட்டாய வீசாக் கட்டணமான 35 அமெரிக்க டொலரிலிருந்து 48 நாடுகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது..
இந்த நடைமுறை ஓகஸ்ட் மாதத்திலிருந்து 06 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

