நீதிக்கான நடைபயணம் பிரான்சு பாரிசில் பாராளுமன்றம் முன்பாக சரியாக 3.30 மணிக்கு புறப்பட்டுள்ளது.

726 0

நீதிக்கான நடைபயணம் பிரான்சு பாரிசில் பாராளுமன்றம் முன்பாக சரியாக 3.30 மணிக்கு புறப்பட்டுள்ளது. அதற்கு முன் உயிர் ஈந்த அனைவருக்குமான அகவணக்கம் செய்யப்பட்டு நடைபயணத்தை மேற்கொள்ளும் மனிதநேயப்பணியாளர் திரு.கஜன் இளையவர்களில் ஒருவரான செல்வன். திவாகர். தமிழீழ மக்கள் பேரவை பொறுப்பாளர் திரு. திருச்சோதி மற்றும் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் உரையாறியிருந்தனர்.

இவர்களுடன் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு. ரஞ்சன் ஆகியோரும் நடைபயணத்தை மேற்கொண்டனர். இன்று காலை 11.00 மணிக்கு பாராளுமன்றம் முன்பாக தமிழினப்படுகொலை நிழற்படங்கள் வைக்கப்பட்டன. பாராளுமன்றத்தைச் சேர்ந்தவர்கள் பல பிரெஞ்சு மக்கள் துண்டுப்பிரசுரத்தை பெற்றுச்சென்றனர். அதில் ஒருவர் உங்கள் நாட்டில் சண்டைப்பிரச்சனை தீர்ந்தது ஆனால் இனப்படுகொலை தொடர்கின்றது என்பதை தான் அறிவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். எமது உணர்வாளர் பலர் கலந்து கொண்டிருந்தனர் பாரிசின் பிரதான வழியால் செல்லும் போது பிரெஞ்சு மொழியிலான துண்டுப்பிரசுரம் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு துணையாக தமிழின படுகொலையை உணர்ந்தும் ஊர்தியும் சென்று கொண்டிருக்கின்றது.