கலேவல வாகன விபத்தில் 11 பேர் காயம்!

291 0

கலேவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மொரகொல்ல பிரதான வீதியின், ஹொம்பாவ பிரதேசத்தில் இன்று  காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்து கலேவல, தம்புளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற வானொன்றும் கோழிப் பண்ணைக்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஓட்​டோவொன்றும் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்​​டோ, மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் 3 ஆண்களும் 8 பெண்களும் காயமடைந்துள்ளனரென, கலேவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.