நெதர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்

332 0

புதிதாக நியமிக்கப்பட்ட நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தானிய கொங்ரெய்ப் சபாநாயகர் கருஜயசூரியவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.குறித்த சந்திப்பு நேற்றையதினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.இச் சந்திப்பின் போது நெதர்லாந்தின் இலங்கைக்கான துணைத் தூதுவரும் உடனிருந்தார்.