அமைச்சரவை அந்தஸ்த்தற்ற டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி பெரேரா மற்றும் அமைச்சரவை அந்தஸ்த்தற்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோரக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவுசெய்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளையும் தலைமையினையும் விமர்சித்ததன் காரணமாகவே இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

