ஹெரோயினுடன் நால்வர் கைது

255 0

இரு  வேறுபட்ட பகுதிகளில்  முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள்  கடத்தலுக்கு எதிரான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது ஹெரோயின்  போதைப்பொருளுடன்  நால்வர்  கைது  செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பு  நடவடிக்கைகள்  நேற்று  திங்கட்கிழமை   காலை  8  மணிக்கும்  பிற்பகல்  3  மணிக்கும்  இடைப்பட்ட  காலப்பகுதியில்   களுத்துறை  – தெம்புவன  மற்றும்  யக்கல – வீரகுல  ஆகிய  பகுதிகளிலேயே   முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இரகசிய  தகவல்களுக்கு  அமையவே  இந்த சுற்றிவளைப்புக்கள்   இடம்  பெற்றதாக  பொலிசார்  தெரிவித்தனர்.  வீரகுல பகுதியின்  இரு  வேறுபட்ட பகுதிகளில்  முன்னெடுக்க்பபட்ட  சுற்றிவளைப்புக்களில்  இருவர்  கைது  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.