அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட பணிப்பாளர் சபையினை கைது செய்யுமாறு கோப் குழு பரிந்துரை

328 0

cope-415x260அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட பணிப்பாளர் சபையினை கைது செய்யுமாறு கோப் குழு பரிந்துரை

மத்திய வங்கியின் பிணை முறி விடயம் தொடர்பில் பேப்பச்சுவல் ரெஷரீஸ் நிறுவனத்தின் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட பணிப்பாளர் சபையினை கைது செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கோப் குழுவின் இறுதி அறிக்கையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவர்களை கைது செய்து குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கோப் குழுவின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இருந்து, குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெத்தி வெளிநடப்பு செய்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி விடயத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களால் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையிலேயே, அவர் இன்றை மத்திய செயற்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

கோப் குழுவின் அறிக்கை நாளை தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பவுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.