ஒரு மாதத்திற்கு இலவச படகு சேவை

209 0

கொழும்பு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொம்பெனித் தெரு முதல் கோட்டை வரையான பகுதியில் உள்ள பேர வாவியில் பயணிகள் படகு சேவை ஒன்றை தொடங்கி வைத்தார்.

இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த படகு சேவை, ஒரு மாதத்திற்கு இலவச சேவையை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படகு சேவை ஊடாக குறித்த தூரத்தை 9 – 10 நிமிடங்களில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த படகு சேவையானது அனைத்து வித பாதுகாப்புடனும் இலங்கை கடற்படையுடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.