கருஜெயசூரியவை சந்தித்த யசூசி அகாஷி

194 0

இலங்கைக்கான ஜப்பானின் முன்னாள் விசேட தூதுவர் யசூசி அகாஷி மற்றும் விருந்தினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்து சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்து கலந்துரையாடினர்.

அதன் பின்னர் அவர்கள் சபை நடவடிக்கையை அவதானிப்பதற்காக சபாநாயகர் விருந்தினர் கலரிக்கு வருகை தந்தனர்.

இதன்போது சபையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் ,எம்.பி.க்களை நோட்டமிட்டவாறு வந்த  யசூசி அகாஷி, சபையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.யான சுமந்திரன் அமர்ந்திருப்பதனைக்கண்டு,  அவருக்கு  கையசைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். உடனடியாகவே சுமந்திரன் மற்றும் ஸ்ரீதரன் எம்.பி.க்கள் பதிலுக்கு கையசைத்து தம் மகிழ்ச்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதன் பின்னர் சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி , இலங்கைக்கான ஜப்பானின் முன்னாள் விசேட தூதுவர் யசூசி அகாஷி மற்றும் விருந்தினர்கள் சபைக்கு வந்திருப்பதாகவும் அவரை பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக வரவேற்பதாகவும் கூறியபோது சபையில் இருந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள் மேசைகளில் தட்டி அவர்களை  வரவேற்றனர்.

அவரும் பதிலுக்கு சபையினருக்கு கையசைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.