இத்தாலி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் கியூசெப் கான்டே

189 0

இத்தாலி பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் கியூசெப் கான்டே அறிவித்துள்ளார்.

இத்தாலி நாட்டின் பிரதமர் கியூசெப் கான்ட்டே 14 மாதங்களுக்கு முன்னர் மேட்டியோ சால்வினியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தினார். மேட்டியோ சால்வினி துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.
கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை திரும்பப் பெற்ற சால்வினி, கியூசெப்பி கான்ட்டே தன்னுடைய பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத  கியூசெப்பி கான்டே, தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அதன்படி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், உள்துறை மந்திரியான மேட்டியோ சால்வினி தனிப்பட்ட மற்றும் அரசியல் லாபத்திற்காக ஆளும் கூட்டணியை அழிக்க முயற்சி செய்து வருகிறார். அவரது முடிவுகள் இந்நாட்டிற்கு ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளார்.