எமக்கு ஜனாதிபதி வேட்பாளர் அல்ல பிரச்சினை, அவரது கொள்கை – பாட்டாளி

312 0

சஜித் பிரேமதாசவா?  அல்லது வேறு யாருமா? என்பது எமக்குப் பிரச்சினையல்ல எனவும் ஆதரவு வழங்குவதற்கு வேட்பாளராக வருபவரது வேலைத்திட்டமும், கொள்கையுமே எமக்கு அவசியம் எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (19) ஆரம்பமாகிய புகைப்படக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஒன்றை மாத்திரம் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த தேர்தலுடன் குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இம்மாத இறுதிக்குள் அரசாங்கத்துடன் உள்ள சகல கட்சிகளுடனும் கலந்துரையாடியதன் பின்னர், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், கூட்டணி இரண்டையும் ஒரே நேரத்தில் மக்களுக்கு அறிவிக்கவுள்ளோம் எனவும் அவர் மேலும் கூறினார்.