இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில் மிருகக்கொழுப்பு கலப்படம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட வெளிநாட்டு ஆய்வறிக்கை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்வரும் தினங்களில் சபாநாயகர் குறித்த அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பார் எனவும்  நுகர்வோர் விவகார  அதிகாரசபை வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் சந்தைகளில் இருந்து பால்மாக்களின் மாதிரிகளை பெற்றுக்கொண்டு அதனை ஜேர்மனில் பரிசோதனை செய்திருக்கின்றது. ஜேர்மனில் மேற்கொண்ட ஆய்வறிக்கையே தற்போது சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.