புற்றுநோய் மருந்துப்பொருள் கொள்வனவு பத்திரத்தின் கையொப்பத்தில் சந்தேகம்

314 0

புற்றுநோய் மருந்துக்கான கொள்வனவு பதிவு ஆவணத்தில் காணப்படும்  கையொப்பம்  தொடர்பில்  பாரிய  சந்தேகம் எழுந்துள்ளதாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள்  சங்கம் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை செய்துள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புற்றுநோய்  மருந்துக்கான கொள்வனவு  பதிவு  ஆவணத்தில் காணப்படும்  கையொப்பம்  தொடர்பில்  பாரிய  சந்தேகம்  எழுந்துள்ளதாகவும்  அது  தொடர்பில்  கவனம்  செலுத்தமாறு கூறியும்  அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள்  சங்கம்  குற்றப்புலனாய்வு  திணைக்களத்திற்கு  முறைப்பாடொன்றை  அளித்துள்ளதாக   அந்த  சங்கத்தின் செயலாளர்  வைத்தியர் ஹரித  அளுத்கே தெரிவித்துள்ளார்.

இம்முறைப்பாட்டு கடிதத்தின்  பிரதிகள்    பொலிஸ்மா அதிபர்  , சட்டமா அதிபர்   சுகாதார  அமைச்சின்  செயலாளர்  , சுகாதார  சேவைகள்  பணிப்பாளர் நாயகம்  , தேசிய  மருந்து  ஒழுங்குமுறை  ஆணையத்தின்  தலைவர்  ஆகியோருக்கும்  அனைத்து  பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கும்  அனுப்பி  வைக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டார்.

அக்கடித்தின் விபரம் வருமாறு , ரஷ்யாவிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்ட  புற்றுநோய்க்கான  மருந்துப்பொருட்களின்  கொள்வனவு   பதிவு  ஆவணத்தில்  காணப்படும்  கையெழுத்து  தொடர்பில்  பாரிய  சந்தேகம்  எழுந்துள்ளது.

விசேட  புற்றுநோய்  நிபுணர்களினால் நிராகரிக்கப்பட்ட  மருந்து  பொருட்களை  சுகாதார  அமைச்சர்  ராஜித சேனாரத்னவும்  அவருடன் சேர்ந்தவர்களும்  நாட்டுக்குள்  கொண்டு  வரும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  அந்த வகையில்   அந்த  மருந்து பொருட்களை நாட்டிற்குள்  கொண்டுவருவதற்கான  அனுமதி  கடந்த  2016. 02.19  வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அண்மையில் பாராளுமன்றத்தில்  இடம்  பெற்ற  விவாதத்தின்  போது  அந்த  மருந்துப்பொருட்களை நாட்டிற்குள்  கொண்டுவருவதற்கான அனுமதியினை வழங்க தேசிய  மருந்து  ஒழுங்குமுறை  ஆணையத்தின்  தலைவர்  பேராசிரியர்  லால் ஜெயகொடி பத்திரத்தில்    கையொப்பம்  இட்டுள்ளதாக  கூறியிருந்தார்.

இருப்பினும் , அந்த  பத்திரத்தில்  உள்ளது பேராசிரியர் லால் ஜெயக்கொடியின் கையொப்பம்    இல்லை என்று  பலதரப்பினர்  எமது கவதானத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

ஆகவே ,  அது  தொடர்பில்  நாம்  ஆராய்ந்திருந்தோம்.. அதற்கமைய  பேராசிரியர்   லால்  ஜெயக்கொடியின்  கையெழுத்துடன், வெளியிடப்பட்ட   2015  ஆகஸ்ட்  6  திகதி  கடிதம்   எங்களால்  கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கடிதத்தில்  உள்ள  கையொப்பத்தை  அந்த  ஆவணத்துடன். ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து   இரண்டிலும்  கையொப்பங்களில்  வேறுபாடுகள்  காணப்பட்டன. ஆகவே ,  புற்றுநோய்கான  தடுப்பு  ஊசி  கொள்வனவின்  போது மறைமுகமான முறையில்  கையொப்பம்  இடப்பட்டு  கொள்வனவு  செய்யப்பட்டிருக்கலாம்  என்ற  சந்தேகம்  எழுகின்றது. தரம்  தொடர்பில்  பிரச்சினை  இருப்பதாக விசேட  புற்றுநோய்  நிபுணர்கள்  குறிப்பிட்ட  போதிலும்  , நாட்டிற்குள்  பாவனையில்  உள்ள  நிலையில்   இந்த  மருந்து  பொருள்  கொள்வனவு  தொடர்பிலான  கையொப்பத்திலும்  சந்தேகம்  நிலலுகின்றது. ஆகவே  ,  அது  தொடர்பில்  விசாரணைகளை  மேற்கொள்ள வேண்டும் என  கேட்டுக்கொள்கின்றோம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.