மூவின மக்களும் எதிர்பார்க்கும் சகல தகுதியுள்ள வேட்பாளரை நாளை மறுதினம் அறிவிப்போம் – ஜே.வி.பி.

26 0

இந்த நாட்டில் மூவின மக்களும் எதிர்பார்க்கும் சகல தகுதிகளும் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரையே நாளைமறுதினம் களமிறக்குவதாக அறிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி, பிரதான கட்சிகளின் பொய்களையும் ஊழல் குற்றங்களை நிராகரிக்கும் சகல மக்களும் தம்முடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வருமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்ட போதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதனைக் குறிப்பிட்டார்.

ராஜபக்ஷவை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மீண்டும் ராஜபக்ஷவை பலப்படுத்தும் வேலைதிட்டங்கலையே முன்னெடுத்தது. இந்த ஆட்சியில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றது. ஊழல் மோசடிகள் குறித்து பேசியவர்கள் மத்திய வங்கி ஊழலில் ஈடுபட்டனர்.

ஆகவே 2015 ஆம் ஆண்டும் ஊழல் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் ஆட்சிகள் இனியும் இடம்பெறக் கூடாது. மாறி மாறி இவர்களின் ஊழலை முன்னெடுக்க இடமளிக்க முடியாது என்றும் கூறினார்.