பலாலி விமான நிலையத்திற்காக காணிகளை சுவீகரிப்பதை அனுமதிக்க முடியாது – மாவை

90 0

பலாலி விமான நிலையத்தின் ஓடுதள விஸ்தரிப்பின் போது  மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது.மாறாக தேவைப்படின் கடற்கரை பக்கமாக அதனை நிரவி ஓடுதளத்தை அமையுங்கள் அதற்கான வழிவகையை சம்பந்தப்படட அதிகாரிகள ஆராயுங்கள் என பாராளுமன்ற  உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க ஊடாக அதிகாரி களுக்கு தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலிலேயே பாராளுமனற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தற்போது நடைபெற்று வருகின்றது. விமான நிலையத்துக்கான ஓடுதளம் விஸ்தரிக்கப் படுமாயின் மக்களின் காணிகள் சிலவற்றை சுவீகரிக்க ஆலோசித்து வருவதாக அறிகின்றேன். அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓடுதளம் விஸ்தரிக்க வேண்டுமாயின் விமான நிலையத்தின் வடக்கு பக்கமாக உள்ள கடல் பகுதியை நிரவி அதன் ஊடாக ஊடுதளத்தை  அமைக்க முடியும் என்றார்.

இதன் போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு தரப்பினர், விமான நிலைய அபிவிருத்தியின் போது காணிகள் சுவீகரிப்பது தொடர்பில் இப்போது எந்த முயற்சியும் நடைபெறவில்லை. நீங்கள் சொல்வது போல கடலை நிரவி ஓடுதளம் அமைப்பது தொடர்பாக நாமும் சிவில் விமான போக்குவரத்து துறையினர் போன்ற பல தரப்புக்களுடனும் பேசி ஓர் முடிவுக்கு வரமுடியும் என்றனர்.