காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

64 0

வெலிகந்த, நாமல்கம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 9.45 மணி அளவில் இந்த நபர் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த நபர் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

52 வயதுடைய நாமல்கம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.