சஜித்துக்கு முதுகெலும்பு இல்லை-ரொஷான் ரணசிங்க

102 0

அமைச்சர் சஜித் பிரேமதாச என்பவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை விட தோல்வியுற்ற தலைவர் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ நாட்டிற்கு சேவை செய்த நபர் என்றும் , கோட்டாபய ராஜபக்ஸவால் அது செயலில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

அதேபோல், எதிர்காலத்தைப் பற்றிய பார்வை கொண்ட தலைவரொருவரே நாட்டு மக்களின் கோரிக்கையாக உள்ளதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு அவ்வாறான எவ்வித எதிர்கால பார்வையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியினுள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக பேசிய நபர்களுக்காக பேசுவதற்கேனும் அவருக்கு முதுகெலும்பு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்தார்.