வடக்கில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள மீனவர்களுக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.
உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்பட்ட மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு இன்றுபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

