பாடசாலை மாணவர்களுக்கும், பிரிவெனா பிக்கு மாணவர்களுக்குமான அடுத்த ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நாளை ஆரம்பமாகிறது.
இந் நிகழ்வு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
வருடத்தின் இறுதி தவணைக்கான பாடசாலை விடுமுறைக்கு முன்னர் சகல மாணவர்களுக்குமான பாடப் புத்தகங்களை விநியோகிக்குமாறு கல்வி அமைச்சர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இலவச பாடப் புத்தகங்களை வழங்குவதற்காக அரசாங்கம் இந்த முறை நான்காயிரத்து 160 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

