யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

365 0

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனனர்.

மாணவர்களின் நலன் சார்ந்து 3 கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் இன்று  இவ்வாறு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் ஒருவரை நியமிக்குமாறும் தாமதமடைந்துள்ள பட்டமளிப்பு விழாவினை நடத்துமாறும் வௌியிடப்படாமலுள்ள பரீட்சைப் பெறுபேறுகளை வௌியிடுமாறும் கோரியே இந்த வகுப்புப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கு கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.