ஹிஸ்புல்லாஹ்வின் பாராளுமன்ற உறுப்புரிமையை பறிக்கவும் முடியும்!

327 0

சட்டத்துக்கும் அரசியல் அமைப்பிற்கும் முரணாக  அங்கீகாரம் இல்லாத வகையில் உருவாக்கப்பட்ட பட்டிகளோ கம்பஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் இதனுடன் தொடர்புபட்ட நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் பட்டிகளோ கம்பஸ் நிறுவனத்தை உடனடியாக அரச உடைமையாக மாற்ற வேண்டும் என ஜே.வி.பியின் பாராளுமன்ற உருப்பினர்  நளிந்த ஜெயதிஸ்ஸ சபையில் தெரிவித்தார்.

அரசியல் அமைப்பின் 91(1) இன் பிரகாரம் இவ்வாறான சட்டவிரோத உடன்படிக்கை செய்துகொண்ட குற்றத்திற்காக  எதிர்காலத்திற்கு செயற்படும் வகையில் ஹிஸ்புல்லாஹ்வின் பாராளுமன்ற உறுப்புரிமையை பறிக்க முடியும் எனவும் சபையில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று பட்டிகளோ கம்பஸ் நிறுவனம் குறித்து ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது அவர் இவற்றைக் குறிப்பிட்டார்.