எனது வங்கிப்பணம் முழுவதையும் நோயாளிகளுக்கு வழங்குகிறேன் -மகிந்த ராஜபச்க

57 0

namal-mahindaஇரண்டு ஆண்டுகளாக ஆராய்ந்துகொண்டிருக்கும் தனது வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதையும் இலங்கையின் மருத்துவ துறைக்கு வழங்க தான் தயாராக உள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதில் உள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற தனது 18 மில்லியன் ரூபாய்களையும் அரசாங்கத்திற்கே எடுத்துக்கொண்டு, நோயாளிகள் மீது சுமத்தியுள்ள VAT சுமையை அகற்றுமாறு அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனது வங்கிக் கணக்கில் முறைகேடாக வைப்பில் இடப்பட்ட ஒரு டொலரையேனும் அரசாங்கம் கண்டுபிடிக்குமாயின் தனது கழுத்தை வெட்டிக்கொள்ள தற்போதும் தயாராகவே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அரசாங்கத்திற்கு பணம் தேவை என்றால் அப்பாவி நோயாளிகள் மீது VAT சுமையை சுமத்தாமல் வருமானம் ஈட்டிக்கொள்ளக் கூடிய வழிகள் அதிகம் உள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.