வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களுடன் ஒருவர் கைது

295 0

சட்டவிரோதமாக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த நபர் ஒருவர் இன்று மாலை கிரேன்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரிடமிருந்து 7 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரை கிரேன்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிரேன்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.