கழிவு தேயிலையை ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவனெல்லை பகுதியில் வைத்து கழிவு தேயிலையை ஏற்றிச்சென்ற மூன்று லொறிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அதன்போது, 18ஆயிரத்து 725 கிலோகிராம் கழிவு தேயிலை கைப்பற்றப்பட்டதுடன், அதனை ஏற்றிச்சென்ற மூன்று லொறிகள் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.

