முஸ்லிம் காங்கிரஸ்- கூட்டமைப்பு முக்கிய பேச்சுவார்த்தை

380 0

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக உருவாக்கம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை சகல அதிகாரங்களும் கொண்டதாக உருவாக்குவதற்கு, கூட்டமைப்புடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகின்றது.

இவ்விடயம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாவது, “குறித்த விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.