மயக்கமுற்று வீழ்ந்த மாணவன் உயிரிழப்பு!

41 0

விளையாட்டுப் பயிற்சியில் ஈடபட்ட பாடசாலை மாணவன் ஒருவன் மயக்கமுற்று வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று கம்பஹா, சப்புகஸ்கந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சப்புகஸ்கந்த பகுதியில் உள்ள பாடசாலையில் தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் பாடசாலை மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டபோது திடீர் மயக்கமுற்கு கீழே வீழ்ந்துள்ளான்

இதையடுத்து குறித்த மாணவனை கிரிபத்கொடையில் உள்ள அரச வைத்தியசாலைக்கு கொண்டும் செல்லும் வேளையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 17 வயதையுடைய அருணா தனாஜய ஹெட்டியாராச்சி என்பவர் ஆவார்.

உயிரிழந்த மாணவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிரிபத்கொட அரச வைத்தியாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.