ரணில் விக்கிரமசிங்கவுக்கு சவால் விட்ட விஜயதாச!

51 0

காணி விசேட திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக நிதிமன்றம் சென்றதுக்காக தமக்கு எதிராக முடிந்தால் மக்களை அணித்திரட்டி காட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ  சவால் விடுத்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவாராக இருந்தால் பிணை எதுவும் இன்றி அவரை வீட்டுக்கு திருப்பி அனுப்புவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணி விசேட திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு 2003 ஆண்டு முயற்சித்தார். அதற்கு நீதிமன்றத்தின் எதிர்ப்பு வெளியாகியதால் அதனை கொண்டுவர முடியாமல் போனது. அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு முதல் மீண்டும் காணி விசேட திருத்தச்சட்ட மூலத்தை கொண்டுவருவதற்கு முய்றசிகளை எடுத்து வருகிறார். அமைச்சரவையில் இந்த திருத்தச் சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பை வெளியிட்டதால்  அவரின் முயற்சிகள் தோல்வியடைந்தன. அதன் பின்னர் இறதியாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி மீண்டும் இந்த திருத்த சட்டமூலம் மீண்டும் அமைச்சரவைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதும் எனது எதிர்ப்பை நான் வெளியிட்டிருந்தேன்.

தற்போது இந்த காணி விசேட திருத்தச் சட்டமூலத்துக்கு காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்கவுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் வழுக்காட்டாயமாக இந்த திருத்தச் சட்டமூலத்துக்கான கையப்பத்தை பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஆகவே இந்த திருத்தச்சட்ட மூலத்தினூடாக இலங்கையின் காணிகளை வெளிநாட்டு உடன்படிக்கைகளை கொண்டு அந்த நிறுவனங்களுக்கு விற்பதற்கே முயற்சி செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.