நாவலப்பிட்டியில் கைது செய்யப்பட்ட அபுசாலி மொஹமட் சஹீட் அல்லது அபுசலாமா என்பவர் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இவரை நபரைக் கைது செய்திருந்தனர்.
தற்போது இவர் கொழும்பு குற்றப்புனாய்வுப் பிரிவினரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

