யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் பாரிய பேரணி!

339 0

யாழில் பேரெழுச்சியுடன் நடந்த ‘எழுக தமிழ்’ பேரணியைப் போன்று பாரிய மக்கள் பேரணியை நடத்த தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்தியகுழு கூட்டம் நேற்று  இடம்பெற்றது. இதன்போதே பேரணி தொடர்பாக தீர்மானிக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நில ஆக்கிரமிப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் ஏற்பட்டுள்ள தேங்கு நிலை, அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத்தகு விசாரணைகள் நடைபெறாமை, இராணுவமயமாக்கல் மற்றும் மீள்க்குடியமர்வு போன்ற ஆறு விடயங்கள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ‘எழுக தமிழ்’ போன்று இந்த போராட்டத்திற்கும் பெயர் சூட்டப்படும் என்றும் போராட்டத்தின் இறுதி ஏற்பாடுகளை மேற்கொள்ள எதிர்வரும் வாரம் தமிழ் மக்கள் பேரவை மீண்டும் கூடி ஆராயவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.