முடியுமானால் தனக்கு இருப்பதாக கூறும் கல்வித் தகைமைகளை முன்வைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் அக்கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க இன்று (27) பகிரங்க சவால் விடுத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.
குறைந்தது சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறாவது உள்ள ஒருவரையே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவுள்ளோம். தனக்கு கல்வித் தகுதிகள் இருப்பதாக கூறித் திரிவதில் பயனில்லை. ஊடகங்களிடம் அதனை முடியுமானால் பொது மக்களிடம் சமர்ப்பிக்கவும் எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

