ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் சாத்தியமற்றது!

392 0

ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுவதற்கு  முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது. மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமாயின் அரசாங்கம் உடனடியாக பாராளுமன்றத்தில் எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கையினையும் ,   மாகாண  சபை தேர்தல் திருத்தம் தொடர்பான பிரேரணையையும்  சமர்பிக்க வேண்டும்  என  பாராளுமன்ற உறுப்பினர்  டலஸ் அழகப் பெரும தெரிவித்தார்.

 

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல்  இடம் பெறுவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தல் இடம் பெறாவிடின்  தான்  பதவி  விலகுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளமை  பொறுத்தமற்றது.  ஆணைக்குழுவின் தலைவர்  பதவி விலகுவதால் மாத்திரம்  பிரச்சினைகளுக்கு தீர்வை  காண முடியாது.  மாறாக  பிரச்சினைகள் மேலும் தீவிரமடையும்.

காலவரைறையின்றி பிற்போடப்பட்டுள்  மாகண சபை தேர்தல்யே முதலில் இடம் பெற  வேண்டும். அரசியல் தேவைகளுக்காகவே  மாகாண சபை  தேர்தல் தேர்தல்  திருத்த முறைமையினை காரணம் காட்டி  பிற்போடப்பட்டது.   இதற்கு     தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும்    ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பொறுப்பு  கூற வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.