நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் ஏற்பட்டிருந்த மின் வெட்டு தற்போது வழமைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது.
நாட்டில் காணப்பட்ட கடும் காற்று காரணமாக நேற்று இரவு முதல் பல பிரதேசங்களுக்கு மின் விநியோகத் தடை ஏற்பட்டிருந்ததாக அந்த அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன கூறினார்.
அதன்படி மாத்தறை, காலி, தெனியாய, ஹக்மன, அகலவத்த, இரத்தினபுரி, பலாங்கொடை, ருவன்வெல்ல, கலவான மற்றும் புளத்கொஹிபிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கு ஏற்பட்ட மின் விநியோகத் தடை தற்போது சீராக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

