தமிழ் மொழியை கற்றுக் கொள்ளாமை எனது குறைபாடு-ரணில்

302 0

இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த வெவ்வெறு மொழிகளை பேசும் திறமை முக்கியமானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் இரண்டாம் மொழி கல்வியில் விஷேட சித்தி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பிரதமர் தலைமையில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

மொழி பிரச்சினையால் புரிந்துணர்வு இல்லாமற்போகும் போது அது முரண்பாட்டிற்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தக் காலத்தில் நாங்கள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவில்லை. அது எனது குறைபாடு என்று பிரதமர் கூறியுள்ளார்.

எனினும் அப்போது தான் ஆங்கில மொழியை கற்றுக் கொண்டதாக பிரதமர் கூறியுள்ளார்.