ரஞ்ஜனுக்கு எதிராக மேலும் ஒரு முறைப்பாடு

327 0

இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு எதிராக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பண்டாரவளை ஸ்ரீ அசோக்காராம புத்தின்த தேரர் மற்றும் ஊவா மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராய்ச்சி ஆகியோர் இணைந்தே மேற்படி புகாரை பதிவுசெய்துள்ளனர்.

மகாநாயக்கர்களை இழிவுபடுத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க செயற்படுவதை ஆட்சேபித்தே இப்புகார் வழங்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் மகாசங்கத்தினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தவறின் அவருக்கெதிராக மகாநாயக்கர்கள் பௌத்தர்கள் ஒன்றிணைந்து பதுளையிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரை செல்வதை எவராலும் தடுக்கமுடியாது.

அத்துடன் இராஜாங்க அமைச்சருக்கெதிராக ஐக்கிய தேசியக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமென்றும் ஸ்ரீ அசோக்கராம புத்தின்த தேரரும ஊவா மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராய்ச்சியும் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.