பேலியகொட பகுதியில் வைத்து ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (16) காலை 9 மணியளவில் பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவெல்ல பகுதியில் வைத்த குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் இருந்து 30 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
31 வயதுடைய களனி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

