மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் பலி

394 0

மந்தாரம் நுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லபுஹேன்வல பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்தள்ளார்.

அப்பகுதியில் உள்ள காணி ஒன்றில் அனுமதியற்ற முறையில் பொறுத்தப்பட்டிருந்த மின்கம்பம் ஒன்றில் இருந்து மின்சாரம் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) பகல் 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மந்தாரம் நுவர, பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மந்தாரம் நுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.