அந்­நி­யத்­ த­லை­யீ­டு தொடர்பில் அவ­தா­ன­மாக இருக்குமாறு சீனா இலங்கைக்கு அறிவுரை!

377 0

அந்­நி­யத் ­த­லை­­யீ­டுகள் தொடர்பில் சிரத்­தை­யுடன்  இருக்­கு­மாறு இலங்­கையை சீனா கேட்­டுள்­ளது. இது  போன்ற  அந்­நி­யத்­ த­லை­யீ­டுகள்  ஒரு­போதும்  நன்­மை­ய­ளிக்­காது. மாறாக அவை  பிரச்­சி­னை­யையும்  அழி­வு­க­ளை­யுமே  கொண்­டு­வரும் என  இலங்­கைக்­கான  சீனத்  தூதுவர்  தெரி­வித்­துள்ளார்.

சீனா சுயா­தீ­ன­மா­னதும்  அமை­தி­யா­ன­து­மான  கொள்­கை­க­ளைக்  கொண்­ட­ நா­டாகும்.  இது ஒரு­போதும்  உள்­ வி­வ­கா­ரங்­களில்   தலை­யி­டா­ததும் அதனை  கடு­மை­யாக எதிர்ப்­பதும் ஆகும். சீனாவும் இலங்­கையும் அந்­நி­யத்­ த­லை­யீ­டுகள் பற்றி  அவ­தா­ன­மாக  இருக்க  வேண்டும். நாங்கள்  சுயா­தீ­ன­மாக  இருக்­கவும் உரிய  முடி­வு­களை  எடுக்­கவும்  முய­ல­ வேண்டும்.  இதுவே சிறந்த எதிர்­கா­லத்­துக்­கான பாதை­யாகும்.

ஹொங்கொங் சீனா­விடம்  கைய­ளிக்­கப்­பட்ட   22ஆவது  நிறைவு  நாள்  விழா­வான ஜூலை முதலாம்  திகதி  சில  அசம்­பா­வி­தங்கள்  ஏற்­பட்­டன. ஹொங்­கொங்கில்  ஏற்­பட்ட  அண்­மைய  சம்­ப­வங்கள்  உல­கிற்கு  அதிர்ச்­சி­ய­ளிப்­ப­வை­யாகும். இது தொடர்பில் மறுநாள் பிரித்­தா­னிய  வெளி­வி­வ­கார  செய­லாளர்  ஜெரமி ஹன்ட் தெரி­வித்த கருத்­துகள் அதி­ர்ச்­சி­யூட்­டக்­ கூ­டி­ய­வை­யாகும்.

ஐக்­கிய இராச்­சியம், ஹொங்கொங் மக்­களின் பின்னால் அவர்­களின் பாது­காப்பு  தொடர்பில் உள்­ளது. பிரித்­தா­னியா ஹொங்கொங்  மக்­களின் சுதந்­தி­ரத்­துக்­காக  பரிந்­து­ரைத்­துள்­ளது.  ஹொங்கொங்  அதி­கா­ரிகள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களைப் பயன்­ப­டுத்தக் கூடாது.

சீனா ஹொங்கொங் தொடர்­பிலும் அங்­குள்ள சீன  மக்கள்  தொடர்­பிலும் இறை­யாண்­மையை 1997ஆம்  ஆண்­டி­லி­ருந்து  பெற்­றுள்­ளது. ஹொங்கொங்  மீதான ஐக்­கிய இராச்­சி­யத்தின்   1840 ஆம்  ஆண்­டி­லி­ருந்து ஆரம்­பித்த  150 வருட  கால­னித்­துவ  ஆட்சி  முடி­வுக்கு  வந்­துள்­ளது.   மறைந்த கால­னித்­துவ  ஆட்­சியின்  புகழில்  இன்றும் சிலர்  குளிர்­காய்­கின்­றனர்  என்ற  கருத்­து­களை பிரித்­தா­னிய  வெளி­வி­வ­காரச் செய­லாளர் தெரி­வித்­தி­ருக்­கின்றார். அவை  அதிர்ச்­சி­யூட்­டு­ப­வை­யாக அமை­யப்­பெற்­றுள்­ள­தாக சீனத் தூதுவர்  தெரிவித்தார். மேலும் ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை  சீனா விடம் கையளித்த பின்னர் ஹொங்கொங்  பற்றி மேற்பார்வை  செய்ய  எந்தவிதமான அதிகாரமும்  இல்லை எனவும்  சீனத்  தூது வர்  தெரிவித்தார்.