தபால் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில்………….

335 0
இன்று (16) மாலை 4 மணி முதல் இரண்டு நாட்களுக்கு அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தபால் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பளப் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தபால் சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார்.

தங்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்தில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.