கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட ஷாஹுல் ஹமீத் ஹிஸ்புல்லா (வயது 21) ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத விசாரணை பிரிவிடம் விசாரணைக்காக இன்றைய தினம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிம் நடத்திய ஹம்பாந்தோட்டை ஆயுதப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றக் குற்றச்சாட்டுக்காகவே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

