பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்கள் வந்தாக வேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் அது பாராளுமன்றத்தை அவமைதிக்கும் செயற்பாடு. அதேபோல் தெரிவுக்குழு முன்னிலையில் வரமறுக்கும் நபர்கள் உண்மைகளை மறைக்கின்றனர் என்றே அர்த்தமாகும். ஜனாதிபதி , பிரதமரை அழைத்தாலும் அவர்களும் வரவேண்டும். பாராளுமன்ற விடயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என சபாநாயகர் கரு ஜெயசூரியவும் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவும் சபையில் தெரிவித்தனர்.

 

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைக்காக வரவழைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தான் தெரிவுக்குழு முன்னிலையில் வரப்போவதில்லை என  பாராளுமன்றத்தில் சிறப்புரிமை எழுப்பி கருத்து தெரிவித்தார். இதற்கு பதில் தெரிவுக்கும் போதே சபாநாயகரும் சபை முதல்வரும் இதனைக் கூறினார்.